‘விடமேறிய கனவு’ – அரங்க ஆற்றுகை

குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ நாவல், சர்வேந்திராவின் நெறியாள்கையில் அரங்க ஆற்றுகையாக ஒஸ்லோவில் 24-02-2018 மேடையேற்றப்பட்டது.

நோர்வேயில் தமிழ் நாவல் ஒன்றினை ‘அரங்க ஆற்றுகை’ எனும் இவ்வகை வடிவமாக்கி மேடையேற்றியமை இதுவே முதற்தடவை. குறுகிய கால அவகாசத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய பரீட்சார்த்த முயற்சி எனலாம்.

‘மே 2009′ சிறைப்பட்ட போராளிகளின் கதைகூறும் அரங்காற்றுகை இது!

அதன் களம், பேசுபொருள், வடிவம், வெளிப்பாடு, படைப்பாக்க உத்தி, கலைஞர்களின் இயல்பான நடிப்பாற்றல், அரங்க ஒளியமைப்பு, இசை, கருப்பாடல் ஆகிய கூறுகளின் நேர்த்தி, காட்சிபூர்வ நெறிப்படுத்தல் காரணமாக இது பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றிருந்தது. மனங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது!

அரங்காற்றுகையின் ஒளிப்படங்கள் சிலவற்றை இங்கு இணைக்கின்றோம்.

* ஒளிப்படங்கள்: Thangavel Kanapathippillai

காணொளி வடிவமும் எதிர்வரும் சில நாட்களுக்குள் வெளியிடப்படும்.

அரங்க அற்றுகையில் பங்கேற்ற கலைஞர்கள்:

– வின்சென்ட் நகுல்

– சிவாதாஸ் சிவபாலசிங்கம்

– இளவாலை விஜயேந்திரன்

– ராஜன் செல்லையா

– சாந்தக்கண்ணா

– சுகிர்தா பஞ்சலிங்கம்

– சஞ்சயன் செல்வமாணிக்கம்

– உதயன் சத்தியநாதன்

– சிறி கனகரட்ணம்

– சண் நரேந்திரன்

– கேதீஸ் நவரட்ணம்

– நெறியாள்கை: சர்வேந்திரா

– ஒளியமைப்பு: கவிதா லட்சுமி

– கருப்பாடல் இசை: முரளி

– பின்னணி இசை: சுந்தர் கணேசன் (குட்டி மாஸ்ரர்) & சிநேகா

– பாடகர்கள்: ரமேஸ், தாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *